தமிழ்நாடு
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த
அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் குறித்த
கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை-1 - 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை-2 - 1 காலிப்பணியிடங்கள் உள்ளன. என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தகுதிகள்
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை - 1 பதவிக்கு சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், உயிர் தொழில்நுட்பம் அல்லது மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த 6 ஆண்டுகள் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம்.
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை - 2 பதவிக்கு சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், உயிர் தொழில்நுட்பம் அல்லது மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த 4 ஆண்டுகள் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம்.
சம்பள
விவரம்
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை - 1 பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.70,000 மாத ஊதியமாக அளிக்கப்படும்.
- திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை - 2 பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000 மாத ஊதியமாக அளிக்கப்படும்.
தேர்வு
செய்யப்படும் முறை
- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு கிடையாது. இமெயில் அல்லது போன் மூலம் நேர்காணல் குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.
- தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மாதத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்
முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnpcb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தின் மூலம் தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் மேல் application for the
post of Project Coordinator என்று
குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
அனுப்ப வேண்டிய முகவரி
The Additional Chief Environmental Engineer,
Tamil Nadu Pollution Control Board,
76, Mount Salai, Guindy,
Chennai - 600032.